Latest Updates
-
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்!
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Milagai Killi Potta Sambar Recipe In Tamil: வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மதிய வேளையில் டக்கென்று சமையலை முடித்துவிட்டு, சமையலறையில் இருந்து வெளிவரவே பலரும் நினைப்போம். நீங்களும் அப்படி தான் நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சமையலை வேகமாக முடிக்கக்கூடிய ஒரு அருமையான சாம்பார் ரெசிபி உள்ளது. அது தான் மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார்.

இந்த சாம்பார் 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பாரை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அதுவும் இந்த சாம்பாரை செய்து, காரசாரமான சிக்கன் ப்ரை அல்லது உருளைக்கிழங்கு ப்ரை செய்தாலே, சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் ரெசிபி குறித்து காதத்துவக்குல சமையல் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளிப் கோட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்மு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* தக்காளி - 3
* சின்ன வெங்காயம் - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் 1 நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து வெதுவெதுப்பான நீரில்
10 நிமிடம் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் கழுவிய துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து, அத்துடன் 4
கப் தண்ணீர், 10 சின்ன வெங்காயம், 3 நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள்,
சீரகம் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை கிள்ளி சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம்
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, புளிச்சாற்றினை
ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, 1 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து
இறக்கினால், மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
