Latest Updates
-
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
மெத்தி பன்னீர் கிரேவி
உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அதை வெந்தயக்கீரையுடன் சேர்த்து கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதுடன், ருசியாகவும் இருக்கும்.
இன்று சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் வித்தியாசமான கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அதை வெந்தயக்கீரையுடன் சேர்த்து கிரேவி செய்யுங்கள். இந்த மெத்தி பன்னீர் கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு மெத்தி பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மெத்தி பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்
* நற்பதமான மெத்தி/வெந்தயக்கீரை - 3 கப் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சுடுநீரில் போட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து 5-6 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மசாலா பொடியை சேர்த்து கிளறி, அரைத்த வெங்காய கலவையை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மெத்தி பன்னீர் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications