Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்ல மாங்காய் இருந்தா இந்த மாதிரி தொகையல் செஞ்சு பாருங்க... இட்லி, தோசையோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்...!
Mango Thogayal Recipe in Tamil: கோடைகாலம் வந்தாலே அது மாங்காயும், மாம்பழமும் சாப்பிடுவதற்கான காலம்தான். பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலம்தான் கிடைக்கும். கிடைக்கும் போதே மாங்காயை சுவைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக மாங்காயை மிளகாய், உப்பு வைத்து சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும், சிலர் மாங்காயை சாம்பார் வைத்தோ அல்லது பச்சடி செய்தோ சாப்பிடுவார்கள்.
மாங்காயை வைத்து வேறுசில சூப்பரான ஐட்டங்களும் செய்யலாம், அப்படி ஒரு சுவையான உணவுதான் மாங்காய் தொகையல். இந்த மாங்காய் தொகையல் இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த மாங்காய் தொகையல் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானதாகும். புளிப்பு, காரம் சுவை நிறைந்த இது இட்லி, தோசையுடன் கோடைகாலத்தில் சாப்பிட அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இந்த பதிவில் சுவையான மாங்காய் தொகையலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- கால் கப் நறுக்கிய மாங்காய்
- அரை கப் துருவிய தேங்காய்
- 5 பச்சை மிளகாய்
- 3 பல் பூண்டு
- ½ கப் கொத்தமல்லி இலைகள்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- மாங்காயை இரண்டாக வெட்டி கொட்டை மற்றும் மற்றொரு பகுதியை தனியாக எடுத்து வைத்து விடவும்(கிளி மூக்கு மாங்காய் சிறந்தது).
- பின்னர் நன்றாக கழுவி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாங்காயுடன், தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- பின்னர் ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை, உளுந்து மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து மாங்காய் தொகையல் மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான மாங்காய் தொகையல் ரெடி.
- இந்த மாங்காய் தொகையல் இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும், அதேபோல சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.



Click it and Unblock the Notifications