Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா செய்வது எப்படி?
Mangalore Kara Bonda: என்ன தான் கோடைக்காலமாக இருந்தாலும், பல பகுதிகளில் மழை பெய்து வருவதால் பலருக்கும் மாலை வேளையில் நன்கு சூடாக பஜ்ஜி, போண்டா என்று ஏதாவது சாப்பிடத் தோன்றும். இன்று மாலை உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸாக என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்பெஷல் கார போண்டாவை செய்யுங்கள்.
இந்த கார போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த மங்களூர் ஸ்டைல் கார போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புளித்த தயிர் - 1/2 கப்
* சமையல் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, ரவை, பொடியாக
நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் புளித்த தயிர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து போண்டா மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை தண்ணீர் சேர்க்காமல்
கலக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீரைத் தெளித்து பிசைய
வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் ஆனதும், அதில் சமையல் சோடாவை சேர்த்து நன்கு பிசைய
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கையை நீரில் நனைத்து பிசைந்து
வைத்துள்ள மாவை சிறிது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால்,
மங்களூர் ஸ்டைல் கார போண்டா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications