Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
மலாய் பன்னீர் கிரேவி
சப்பாத்திக்கு வித்தியாசமாக சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் மலாய் பன்னீர் கிரேவியை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வித்தியாசமாக சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் மலாய் பன்னீர் கிரேவியை செய்யுங்கள். இது சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக மலாய் பன்னீர் கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் அற்புதமாக இருக்கும்.

ஒருவர் பன்னீரை அடிக்கடி தங்கள் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் கால்சியம் அதிகம் உள்ளது. உங்களுக்கு மலாய் பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே மலாய் பன்னீர் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த கிரேவி செய்வது மிகவும் ஈஸி. எனவே இன்று உங்கள் வீட்டில் முயற்சித்து, அது எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்
* பாதாம் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உலர்ந்த வெந்தய இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீம் - 1/2 கப்
* உப்பு - தேவையான அளவு
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு நாக்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பன்னீர் சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, அதை சுடுநீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரைப் பிழிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே சமயம், முந்திரி மற்றும் பாதாமையும் நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலாவைத் தவிர மற்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு நீர் சேர்த்து, பன்னீரையும் போட்டு, மிதமான தீயில் 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியில் அதில் உலர்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி போட்டு, கரம் மசாலாவையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மலாய் பன்னீர் கிரேவி ரெடி!



Click it and Unblock the Notifications











