Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
லெமன் பெப்பர் சிக்கன்
விடுமுறை நாட்களில் விருப்பமான மற்றும் வித்தியாசமான சில ரெசிபிக்களை செய்து சுவைக்க பலருக்கும் ஆசை இருக்கும். இந்த வாரம் நீங்கள் அப்படி ஏதாவது செய்ய விரும்பினால் லெமன் பெப்பர் சிக்கனை செய்யலாம்.
விடுமுறை நாட்களில் விருப்பமான மற்றும் வித்தியாசமான சில ரெசிபிக்களை செய்து சுவைக்க பலருக்கும் ஆசை இருக்கும். இந்த வாரம் நீங்கள் அப்படி ஏதாவது செய்ய விரும்பினால் லெமன் பெப்பர் சிக்கனை செய்யலாம். சிக்கன் பலருக்கும் பிடித்த அதே சமயம் விலை குறைவான உணவுப் பொருள் என்பதால் வாரந்தோறும் சிக்கனை வாங்குவோர் ஏராளம். அதோடு சிக்கனில் ஏராளமான சத்துக்களும் உள்ளன. முக்கியமாக புரோட்டீன் உள்ளது. எனவே அடிக்கடி சிக்கனை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

உங்களுக்கு லெமன் பெப்பர் சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே லெமன் பெப்பர் சிக்கனின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கனுக்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு தூள் - சுவைக்கேற்ப
* முட்டை - 1
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு
சாஸ் செய்வதற்கு...
* எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 டீஸ்பூன் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அதில் மிளகுத் தூள், உப்பு, முட்டை, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு பௌலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களான எலுமிச்சை சாறு, சோயா சாஸ், பூண்டு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பின் பௌலில் வைத்துள்ள சாஸை சேர்த்து நன்கு கிளறி, 3-5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட்டு இறக்கினால், சுவையான லெமன் பெப்பர் சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications