Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கார சட்னியை இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை இப்படி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...!
Kothamalli Kara Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசைதான் செய்வீர்களா? பொதுவாக இட்லி அல்லது தோசைக்கு சைடிஷாக வைக்கப்படும் சட்னி கொஞ்சம் காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் ஒரே மாதிரியான கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா? இட்லி, தோசைக்கு ஏதாவது புதிய சட்னி முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை இந்த கொத்தமல்லி கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னி காரம், புளிப்பு இரண்டும் கலந்து இருப்பதால், இட்லியுடன் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், இந்த சட்னிக்காகவே வீட்டில் உள்ளோர் அதிகமாக சாப்பிடுவார்கள். மேலும் இந்த சட்னி சுவையானது என்பதை விட செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி கார சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- வர மிளகாய் - 10
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- பூண்டு பல் - 4
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் வர மிளகாயை போட்டு வதக்கவும்.
- மிளகாய் ஓரளவு வதங்கியதும் அடுப்பை அணைத்து மிளகாயை தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் கொத்தமல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும்.
- கொத்தமல்லியும், கறிவேப்பிலையும் மொறுமொறுப்பாக மாறியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- மிளகாய் போலவே இதையும் ஆற விடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகாய், வதக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி யுடன் பூண்டு மற்றும் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும். இந்த சட்னியை தாளித்தால்தான் அதன் சுவை நன்றாக இருக்கும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் சட்னி மீது ஊற்றி கிளறினால் சுவையான கொத்தமல்லி கார சட்னி ரெடி!
- இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











