Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மணமணக்கும்.. கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து டுடே ட்ரை பண்ணி பாருங்க..
Kongunadu Vellai Biryani Recipe In Tamil: சன்டே வந்தா அனைவருக்கும் ஒரே குஷி தான். ஏனெனில் இன்று தான் அசைவ உணவுகளை பிடித்தவாறு சமைத்து, பொறுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட முடியும். அதுவும் நீங்கள் பிரியாணி பிரியர் என்றால், நிச்சயம் அடிக்கடி உங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடுவீர்கள்.
இன்று உங்களுக்கு பிரியாணி செய்யும் எண்ணம் இருந்தால், வழக்கமாக செய்யும் பிரியாணிக்கு பதிலாக கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணி நல்ல மசாலா வாசனையுடன், சுவையாக இருக்கும். இந்த பிரியாணிக்கு நல்ல காரசாரமான சிக்கன் கிரேவி செய்தால் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இஞ்சி - பெரிய துண்டு
* பூண்டு - 10-12 பல்
* பச்சை மிளகாய் - 3
* முந்திரி - 10 (நீரில் ஊற வைத்து அரைத்தது)
பிரியாணி தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பட்டை - 3
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 5
* அன்னாசிப்பூ - 2
* ஜாவித்ரி - சிறிய துண்டு
* கல்பாசி - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* சிக்கன் - 3/4 கிலோ
* பச்சை மிளகாய் - 3-4
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 3/4 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* பாசுமதி அரிசி - 2 கப் (நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* எலுமிச்சை - 1/2
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் முந்திரியை நீரில் ஊற வைத்து, அதை நன்கு அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை போட்டு நன்கு
அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, ஜாவித்திரி, கல்பாசி, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது, புதினா,
கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சிக்கனை கழுவி சேர்த்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 1 நிமிடம் கிளறி,
கரம் மசாலா, மல்லித் தூள், மிளகுத் தூள், தயிர் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி கொதி வந்ததும், அதில் ஊற
வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து, பாதி எலுமிச்சை சாற்றினை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து, 1 விசில் விட்டு
இறக்கினால், சுவையான கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications




