Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
கொங்குநாடு கோழி குழம்பு
வார இறுதி நாட்களில் வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்ய விரும்புபவரா? அதுவும் நீங்கள் சிக்கன் பிரியரா? அப்படியானால் இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் கொங்குநாடு கோழி குழம்பை வீட்டில் செய்யுங்கள்.
வார இறுதி நாட்களில் வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்ய விரும்புபவரா? அதுவும் நீங்கள் சிக்கன் பிரியரா? அப்படியானால் இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் கொங்குநாடு கோழி குழம்பை வீட்டில் செய்யுங்கள். இந்த கோழி குழம்பு சாதம், புலாவ், பிரியாணி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இது தவிர ரொட்டி, பரோட்டா ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். உங்களுக்கு கொங்குநாடு கோழி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே கொங்குநாடு கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
குழம்பு மிளகாய் தூள் செய்வதற்கு...
* வரமிளகாய் - 100 கிராம்
* மல்லி விதைகள் - 300 கிராம்
* சீரகம் - 25 கிராம்
* மிளகு - 25 கிராம்
குழம்பு செய்வதற்கு...
* நல்லெண்ணெய் - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3-4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சிக்கன் - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குழம்பு மிளகாய் தூள் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை லேசாக வறுத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாயை தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கொங்குநாடு கோழி குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications