1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..

Posted By:

Kollu Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளைகளில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இவற்றிற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? உங்களுக்கு எப்போதும் ஒரே சுவையில் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

Kollu Chutney How To Make Horse Gram Chutney For Idli Dosa

அப்படியானால் வீட்டில் 1/2 கப் கொள்ளு இருந்தால், அவற்றைக் கொண்டு, சட்னி செய்யுங்கள். இந்த கொள்ளு சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக கொள்ளுவை இப்படி செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த கொள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கொள்ளு - 100 கிராம் அல்லது 1/2 கப்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 7
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கொள்ளு சேர்த்து நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான மற்றும் சத்தான கொள்ளு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 4, 2026, 7:11 [IST]
Desktop Bottom Promotion