Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கேரளா ஸ்பெஷல் சேனைக்கிழங்கு எரிசேரி
கேரளாவில் செய்யும் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது சேனைக்கிழங்கு எரிசேரி. இந்த ரெசிபி மதிய வேளையில் சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
கேரளா ரெசிபிக்களின் தனித்துவமான சுவைக்கு முக்கிய காரணம், தேங்காய் எண்ணெயால் சமைப்பது தான். அப்படி கேரளாவில் செய்யும் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது சேனைக்கிழங்கு எரிசேரி. இந்த ரெசிபி மதிய வேளையில் சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மொத்தத்தில் இது ஒரு அற்புதமான சைடு டிஷ். உங்களுக்கு கேரளா ஸ்பெஷல் சேனைக்கிழங்கு எரிசேரி எப்படி செய்வதென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே சேனைக்கிழங்கு எரிசேரியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 2 கப் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கைப் போட்டு, அதில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து, மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* அதே சமயம், மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், சீரகம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* சேனைக்கிழங்கு நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து கரண்டியால் லேசாக மசித்துக் கொள்ளவும்.
* பின் மசித்த சேனைக்கிழங்கில் அரைத்த மசாலா, தேவையான உப்பு மற்றும் சிறிது நீரைத் தெளித்து பிரட்டி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் மூடி வைத்து 4- நிமிடம் வேக வைக்கவும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் தாளித்ததை சேனைக்கிழங்கில் ஊற்றி, அதோடு வறுத்த தேங்காயையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சேனைக்கிழங்கு எரிசேரி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
