Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
கேரளா ஸ்பெஷல் பழம்பொரி
நாம் பெரும்பாலும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் நீங்கள் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் பழம்பொரியை செய்து சுவையுங்கள்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட பலருக்கும் தோன்றும். அப்போது நாம் பெரும்பாலும் பஜ்ஜி, வடை, போண்டா, பக்கோடா என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் நீங்கள் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் பழம்பொரியை செய்து சுவையுங்கள். இது ஒரு இனிப்பு பலகாரம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கேரளாவில் மிகவும் பிரபலமான பழம்பொரி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பழம்பொரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... கடம்பூர் போளி
தேவையான பொருட்கள்:
* நேந்திரம் பழம் - 2 (நன்கு கனிந்தது)
* மைதா - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 2 (பொடி செய்து கொள்ளவும்)
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, சர்க்கரை போட்டு, சிறிது நீர் சேர்த்து, சற்று கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் நேந்திரம் பழத்தை நீள நீளமாக சீவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வாழைப்பழ துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பழம்பொரி தயார்!



Click it and Unblock the Notifications