Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
கேரளா சிக்கன் தோரன்
10 நிமிடத்தில் ஒரு சுவையான சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு இந்த கேரளா சிக்கன் தோரன் சரியானதாக இருக்கும்.
புதன்கிழமை பலரது வீடுகளில் அசைவ உணவாக இருக்கும். அதிலும் சிக்கனை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக மட்டனுடன் ஒப்பிடும் போது இதன் விலை சற்று குறைவு. உங்களுக்கு சிக்கனைக் கொண்டு வறுவல், 65 என்று செய்து சுவைத்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று நாம் ஒரு அற்புதமான கேரள சிக்கன் ரெசிபியைக் காண்போம். அது தான் சிக்கன் தோரன். இது மிகவும் எளிமையான மற்றும் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சுவையான சைடு டிஷ்.

மதியம் 10 நிமிடத்தில் ஒரு சுவையான சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைத்தால், அதற்கு இந்த கேரளா சிக்கன் தோரன் சரியானதாக இருக்கும். இப்போது அந்த கேரளா சிக்கன் தோரனை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: சிக்கன் உப்பு கறி ரெசிபி
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* வர மிளகாய் - 6
* பூண்டு - 6-7 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்ஸி ஜாரில் வர மிளகாய் போட்டு நன்கு பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு கிளறி 10 நிமிடம் சிக்கனை வேக வைத்து இறக்க வேண்டும்.
* அதன் பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த வர மிளகாய் பூண்டு கலலையை சேர்த்து ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கிளறி, பின் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, வேண்டுமானால் சுவைகேற்ப உப்பு தூவி, ஒருசேர நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இறுதியில் மேலே 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கறிவேப்பிலைத் தூவி பிரட்டினால், சுவையான கேரளா சிக்கன் தோரன் தயார்!



Click it and Unblock the Notifications