Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கத்திரிக்காய் மசாலா குழம்பு
இன்று நாம் பார்க்கப் போவது என்னவென்றால், கத்திரிக்காய் மசாலா குழம்பு பற்றி தான். இந்த குழம்பு சாதம் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் சாதத்திற்கு என்ன செய்வதென்று யோசித்து அலுத்துவிட்டதா? உங்களுக்காகவே தினந்தோறும் ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான ரெசிபிக்களை தமிழ் போல்ட்ஸ்கை வெளியிடுகிறது. இன்று நாம் பார்க்கப் போவது என்னவென்றால், கத்திரிக்காய் மசாலா குழம்பு பற்றி தான். இந்த குழம்பு சாதம் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். விருப்பமுள்ளவர்கள், இந்த குழம்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்.

சரி, வாருங்கள் இப்போது கத்திரிக்காய் மசாலா குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 10-15 (பொடியாக நறுக்கவும்)
* சின்ன கத்திரிக்காய் - 5-6 (நறுக்கிக் கொள்ளவும்)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* புளியை தேவையான அளவு நீரில் ஊற வைத்து பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், வெந்தயம், கிராம்பு, பட்டை, மல்லி விதைகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி, பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எஞ்சிய எண்ணெயை ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து, கத்திரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாறு மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் 10-12 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசாலா குழம்பு தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications