Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
கத்திரிக்காய் ரசவாங்கி
எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் ரசவாங்கி செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் ரசவாங்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
மதிய வேளையில் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ரசவாங்கி செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் ரசவாங்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் ரசவாங்கி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் ரசவாங்கியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி நீர் - 1 கப்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பைக் கழுவிப் போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து விட வேண்டும். அதே வேளையில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுத்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு வாணலியை மூடி வைத்து நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி நீர், மஞ்சள் தூள், வெல்லம், வேக வைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் புளியின் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications