Latest Updates
-
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் காஷ்மீரி தம் ஆலு
காஷ்மீரி தம் ஆலு ரெசிபியை நீங்கள் இதுவரை ரெஸ்டாரண்ட்டுகளில் சுவைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
காஷ்மீரி தம் ஆலு என்பது ஒரு பிரபலமான காஷ்மீரி ரெசிபி. இந்த ரெசிபிக்கு வழக்கமான உருளைக்கிழங்கையோ அல்லது பேபி உருளைக்கிழங்குகளையோ பயன்படுத்தலாம். இந்த காஷ்மீரி தம் ஆலு ரெசிபியை நீங்கள் இதுவரை ரெஸ்டாரண்ட்டுகளில் சுவைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இந்த காஷ்மீரி தம் ஆலு ரொட்டி, நாண், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு காஷ்மீரி தம் ஆலு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஷ்மீரி தம் ஆலு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு/ஆலு - 4
* தயிர் - 1 கப்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சுக்கு பவுடர் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சோம்பு பவுடர் - 2 டீஸ்பூன்
* மைதா - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* கருப்பு ஏலக்காய் - 2
* பச்சை ஏலக்காய் - 2
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
* கறித்துண்டு
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்குகளை தோலுரித்துவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை உப்பு நீரில் போட்டு அடுப்பில் வைத்து, உருளைக்கிழங்கை வேக வைத்து இறக்கி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த உருளைக்கிழங்குகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிரை எடுத்து, அத்துடன் மசாலா பொடிகள், மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தயிர் கலவையை ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் நீரை சிறிது ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் மூடி வைத்து 5 முதல் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு கறித்துண்டை நெருப்பில் வைத்து 5 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதே சமயம் ஒரு அலுமினியத்தாளை கப் போன்ற வடிவில் தயாரித்து, கிரேவியின் மேல் வைத்து, சூடேறிய கறித்துண்டை அதில் வைத்து, அந்த கறித்துண்டின் மேல் நெய் ஊற்றி, 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து கிரேவியில் உள்ள கறித்துண்டை நீக்கிவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், காஷ்மீரி தம் ஆலு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications