Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா? -
மதுரை ஸ்டைல் சிக்கன் கொத்துக்கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வீட்டில் மணி பிளாண்ட் இருக்கா? இந்த திசையில் வைத்தால் கோடை வெயில் பறந்து போகும்! -
செவ்வாய் மேஷ ராசியில் உதயமாவதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
காரசாரமான.. ஆட்டுக்கறி தொக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?
ருசியான... கடம்பூர் போளி
நீங்கள் இதுவரை கடைகளில் தான் போளியை சுவைத்தீர்களானால், இன்று உங்கள் வீட்டில் அதை வீட்டிலேயே செய்து சுவையுங்கள். அதிலும் கடம்பூர் போளியை வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.
தற்போது வீட்டிலேயே இருப்பதால், பலரும் பல வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபிக்களை முயற்சித்து, வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்திருப்பார்கள். உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் இனிப்பாக ஏதேனும் ஸ்நாக்ஸ் கேட்டால், அவர்களுக்கு போளி செய்து கொடுங்கள். போளியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மிகவும் பிரபலமான கடம்பூர் போளி. இது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

நீங்கள் இதுவரை கடைகளில் தான் போளியை சுவைத்தீர்களானால், இன்று உங்கள் வீட்டில் அதை வீட்டிலேயே செய்து சுவையுங்கள். அதிலும் கடம்பூர் போளியை வீட்டிலேயே எளிதில் செய்யலாம். கீழே அந்த கடம்பூர் போளியை எப்படி செய்வதென்று எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இன்று உங்கள் வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா மாவு - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* கடலை பருப்பு - 1 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் மைதா மாவு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீர் சேர்த்து மென்மையான மாவாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் எண்ணெய் தடவி, 30 நிமிடம் தனியாக ஊற வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு, நீர் ஊற்றி மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, கடலை பருப்பை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு வாணலியில் மசித்த கடலை பருப்பைப் போட்டு, வெல்லத்தை சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது நன்கு குளிர்ந்த பின் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறு வாழை இலையை எடுத்து, அதன் மேல் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ளுங்கள்.
* இப்போது பிசைந்து வைத்துள்ள ஒரு மைதா மாவு உருண்டையை எடுத்து வாழை இலையின் மையப்பகுதியில் வைத்து தட்டையாக கையால் தேய்த்து, அதன் மேல் உருட்டி வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டையை வைத்து மூட வேண்டும். பின் நெய் அல்லது எண்ணெயைத் தொட்டு மீண்டும் தட்டையாக போளி போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள போளியைப் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கடம்பூர் போளி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications










