Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Iyengar Style Pudalangai Paal Kootu Recipe in Tamil: ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நம் உணவுமுறையில்தான் உள்ளது. ஆரோக்கியமாக வாழ காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். புடலங்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காய்கறிகளில் ஒன்றாகும். இதுவரை நீங்கள் புடலங்காயை வைத்து குழம்பு, பொரியல் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த புடலங்காயை வைத்து ஐயங்கார் ஸ்டைலில் கூட்டு செய்திருக்கிறீர்களா? உண்மைதான், புடலங்காயை வைத்து ஐயங்கார் ஸ்டைலில் சூப்பரான பொரிச்ச கூட்டு செய்யலாம். இந்த ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் கூட்டு சாம்பார் சாதம், ரசம் சாதம், இட்லி, தோசை என்ன அனைத்திற்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் புடலங்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு புடலங்காய் இந்த ஸ்டைலில் கூட்டு செய்து கொடுங்கள். இந்த ஸ்டைலில் செய்தால் புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட ஆசையாக சாப்பிடுவார்கள். இந்த புடலங்காய் கூட்டின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் கூட்டை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 புடலங்காய்
- 100 கிராம் பாசிப்பருப்பு
- தேவையான அளவு உப்பு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 கப் கெட்டியான தேங்காய்ப்பால்
- 1 ஸ்பூன் எண்ணெய்
மசாலா அரைக்க:
- 1 ஸ்பூன் உளுந்து
- 1/2 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1 ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் வேர்க்கடலை
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- பாசிப்பருப்பைக் கழுவி, 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
- புடலங்காயைக் கழுவி, தோல் சீவி, உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஊறவைத்த பருப்பு மற்றும் நறுக்கிய காய்கறியை ஒரு குக்கரில் போட்டு, 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- காய்கறிகள் வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கடாயில் உளுந்து, தனியா, மிளகு மற்றும் சீரகத்தை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
- உளுந்து பொன்னிறமாகும் வரை வறுத்து, சற்று ஆறவிடவும். பின்னர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் மசாலா விழுது, உப்பு மற்றும் வேகவைத்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் இதை சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இப்போது கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்த்து, 1 நிமிடம் மட்டும் கொதிக்கவிடவும்.
- அடுப்பை அணைத்து விட்டு நன்கு கிளறினால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications
