Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
மீதமான இட்லி இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க... ஹோட்டலில் சாப்பிடுற மாதிரியே இருக்கும்...!
Idli Manchurian Recipe in Tamil: பெரும்பாலான தமிழக வீடுகளில் காலை உணவாக இருப்பது இட்லிதான். இட்லியுடன் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால்தான் அன்றைய நாள் சிறப்பாக பலருக்குத் தொடங்குகிறது. இட்லி சுவையான உணவாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. சில சமயங்களில் நமக்கே தெரியாமல் இட்லியை அதிகளவில் செய்து விடுவோம்.
இட்லி அதிகமாக செய்து விட்டால் பொதுவாக அதை வைத்து இட்லி உப்புமா செய்து விடுவோம், ஆனால் வீட்டில் உப்புமா பொதுவாக பலருக்கும் பிடிக்காது. அதற்காக மீதமான இட்லியை தூக்கியெறியவும் முடியாது. அதுபோன்ற தருணத்தில் மீதமான இட்லியை வைத்து வேறுசில சுவையான உணவுகளைத் தயாரிக்கலாம். அப்படி ஒரு சுவையான உணவுதான் இட்லி மஞ்சூரியன்.

சைனீஸ் உணவுகளில் நூடுல்ஸ்க்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமானது என்றால் அது மஞ்சூரியன்தான். சைனீஸ் உணவகங்களுக்கு சென்றால் அனைவரும் நிச்சயம் ஏதாவது ஒரு வகை மஞ்சூரியனை ஆர்டர் செய்வார்கள். பொதுவாக சிக்கன், பன்னீர் போன்றவற்றில்தான் மஞ்சூரியன் செய்வோம், ஆனால் மீதமான இட்லியை வைத்தும் சுவையான மஞ்சூரியன் செய்யலாம். காலையில் மீதமான இட்லியை வைத்து இப்படி மஞ்சூரியன் செய்து மாலை நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இந்த பதிவில் இட்லியை வைத்து எப்படி மஞ்சூரியன் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- இட்லி - 10
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- வெங்காயத் தாள் - 5
- இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- கார்ன் ஃப்ளார் மாவு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- இட்லிகளை சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி, நன்கு காய்ந்த எண்ணெயில் சிவக்க பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பின்னர் மிளகாய் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும்.
- இவை நன்கு கொதித்ததும் அத்துடன் பொரித்த இட்லிகளை சேர்த்து, கார்ன் ஃப்ளார் மாவை 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
- இந்த கலவை நன்கு கெட்டியானதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, வெங்காயத் தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான இட்லி மஞ்சூரியன் ரெடி!
- மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதே ஸ்டைலில் பன்னீர், காளான், காலிஃபிளவர் போன்றவற்றையும் மஞ்சூரியன் செய்யலாம்.



Click it and Unblock the Notifications