Latest Updates
-
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மழை காலத்திற்கு ஏற்ற காரசாரமான சிக்கன் சூப் செய்ய ரெசிபி..!
மழைக்காலம் வந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து குளிர் க்காலமும் வந்து விடும்.. இந்த பருவக்காலங்களில் சூடாக எதையாவது குடித்தால் தொண்டைக்கு நன்றாக இருக்கும் என்று நம்மில் பலர் நினைப்போம்.. நான் அனைவரும் உடனே குடிப்பது டீ மற்றும் காபிதான்.. அதனையும் அடிக்கடி குடித்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என ஐசிஎம்ஆர் சமீபத்தில்தான் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதனால் சளி பிடித்தவர்கள் தொண்டைக்கு இதமாக சூப் செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் சூப் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் சுவை அலாதியாக இருக்கும்.. அவர்களும் அதை விரும்பி குடிப்பார்கள்..

சிக்கன் சூப் செய்ய தேவையான பொருட்கள்
கோழிக்கறி (எலும்புடன்) - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பிறகு, அதில் பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கி வந்த பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதில் மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் உப்பு போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.. அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுமார் 5 -6 விசில் வரை வைத்து வேக வைக்க வேண்டும். 6 விசிலுக்கு பின் குக்கரை அடுப்பில் இருந்து விட்டு இறக்கி வைக்க வேண்டும்.. இதில் இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறினால் அருமையான சிக்கன் சூப் ரெடி..
வீடே மணக்கும் ஆட்டுக்கால் பாயா செய்ய ரெசிபி..!
வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும். சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப்,வெஜ் சூப், மஷ்ரூம் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்யலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications