Latest Updates
-
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
1 மாம்பழமும், 1 கப் கோதுமை மாவும் வெச்சு.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. வீடே மணக்கும்...
Mango Poli Recipe In Tamil: தற்போது மாம்பழ சீசன் என்பதால், அந்த மாம்பழத்தை வாங்கி எப்போதும் வெறுமனே சாப்பிடாமல், அதைக் கொண்டு வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைத்து பாருங்கள். அதுவும் 1 மாம்பழம் இருந்தால், அத்துடன் 1 கப் கோதுமை மாவை சேர்த்து அற்புதமான ஸ்நாக்ஸை செய்து சாப்பிடுங்கள். அது வேறொன்றும் இல்லை மாம்பழ போளி தான்.
இதுவரை நீங்கள் பருப்பு போளி, தேங்காய் போளியை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மாம்பழ போளியை ஒருமுறை செய்து சாப்பிட்டால், பின் மாம்பழம் கிடைக்கும் போதெல்லாம் மாம்பழ போளியை செய்து சாப்பிடுவீர்கள். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையும், மணமும் ஆளை மயக்கும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த மாம்பழ போளி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மாம்பழ போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* மாம்பழம் - 1
* நெய் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, சற்று பிசுபிசுப்பான பதத்தில்
பிசைந்து, 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்து, மூடி வைத்து,
முடிந்தால் 1/2 மணிநேரம் ஊற வையுங்கள்.
* பிறகு மாம்பழத்தை எடுத்து, அதன் சதைப் பகுதியை எடுத்து, ஒரு
கிண்ணத்தில் போட்டு, கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் மசித்து வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்து, அத்துடன் 4
டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மாம்பழ கலவையானது அல்வா போன்ற பதத்திற்கு வந்ததும், அதை இறக்கி ஒரு
கிண்ணத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை எடுத்து, அதில் எண்ணெய்
தடவி, ஊற வைத்துள்ள கோதுமை மாவை சிறிது எடுத்து, அதன் மேல் வைத்து
சற்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே சிறிது மாம்பழ கலவையை வைத்து மூடி, கையில் எண்ணெயை
தடவி, போளி போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ள போளியை சேர்த்து, நெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து
எடுத்தால், சுவையான மாம்பழ போளி தயார்.



Click it and Unblock the Notifications