குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி

Subscribe to Boldsky

குல்பவேட் ஸ்வீட்ஸ் கர்நாடகவின் தனித்துவமான ஸ்வீட்ஸ் வகை ஆகும். இந்த ஸ்வீட்ஸ் பொதுவாக கர்நாடகவில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளுக்கும் மற்றும் வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கும் இதை செய்து மகிழ்வர்.

இந்த குல்பவேட் ஸ்வீட்ஸ் கோதுமை மாவை வெல்லத்துடன் சேர்த்து காய்ச்சி செய்யப்படும் லட்டாகும். இதனுடன் சேர்க்கப்படும் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி இந்த ஸ்வீட்டுக்கு நறுமணத்தை தருவதோடு நல்ல மொறு மொறுப்பான சுவையையும் தருகிறது.

இந்த ஆட்டா மற்றும் வெல்லத்தை கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபி மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்து விடலாம். இதை எந்த அனுபவமும் இல்லாமல் எளிதாக செய்து விடலாம். கண்டிப்பாக இந்த ஸ்வீட்ஸ் உங்கள் நாக்கின் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கும்.

இந்த ரெசிபியை நீங்கள் சிரோட்டி ரவா கொண்டும் செய்யலாம். உங்கள் பண்டிகைகளுக்கு இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான செய்முறை விளக்கங்களும் அதற்கான வீடியோ ரெசிபியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

குல்பவேட்ரெசிபி வீடியோ

குல்பவேட் ரெசிபி
குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி /ஆட்டா மற்றும் வெல்லம் லட்டு ரெசிபி /குல்பவேட் உந்தி ரெசிபி
Prep Time
5 Mins
Cook Time
5M
Total Time
25 Mins

Recipe By: சுமா ஜெயந்த்

Recipe Type: ஸ்வீட்ஸ்

Serves: 15 லட்டுகள்

Ingredients
 • நெய் - 9 டேபிள் ஸ்பூன் +கிரீஸிங்

  ஆட்டா (கோதுமை மாவு) - 1 பெளல்

  வெல்லம் - 3/4 பெளல்

  தண்ணீர் - 1/4 கப்

  தேங்காய் துருவல் - 1/2 கப்

  ஏலக்காய் பொடி - 21/2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • 1. அடுப்பில் கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

  2. இப்பொழுது கோதுமை மாவை சேர்க்கவும்

  3. மிதமான சூட்டில் வைத்து கோதுமை மாவை 5-7 நிமிடங்கள் வறுக்கவும். லேசான பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

  4. வறுத்த மாவை ஒரு தட்டிற்கு மாற்றி விட வேண்டும்

  5. பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் உடைத்த வெல்லத்தை சேர்க்க வேண்டும்

  6. உடனடியாக தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனால் கருகுவதை தவிர்க்கலாம்.

  7. மிதமான தீயில் வெல்லம் முழுவதும் கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

  8. இப்பொழுது இதனுடன் 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

  9. பிறகு வறுத்த கோதுமை மாவை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

  10. நன்றாக பிசைவதற்கான பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்

  11. இப்பொழுது தேங்காய் துருவலை அதனுடன் சேர்க்க வேண்டும்

  12. மறுபடியும் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட வேண்டும்

  13. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

  14. உங்கள் உள்ளங்கைகளால் நெய்யை தொட்டு தடவிக் கொள்ள வேண்டும்.

  15. உங்கள் உள்ளங்கைகளை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்

  16. இப்பொழுது சிறிய சிறிய லட்டுகளாக உருட்ட வேண்டும்.

  17. ஒரு தட்டில் இந்த லட்டுகளை வைத்து பரிமாறவும்.

Instructions
 • 1.தேங்காய் துருவலுக்கு பதிலாக நன்றாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் பயன்படுத்தலாம்.
 • 2.சூடான பதத்தில் மட்டுமே லட்டு செய்ய முடியும். எனவே சூடாக இருக்கும் போதே லட்டுவை பிடித்து விட வேண்டும்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 லட்டு
 • கலோரிகள் - 296
 • கொழுப்பு - 5.5 கிராம்
 • புரோட்டீன் - 5 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 46 கிராம்
 • சுகர் - 13.1 கிராம்
 • நார்ச்சத்து - 4 கிராம்

படிப்படியான செய்முறை விளக்கம் :குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி

1. அடுப்பில் கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

குல்பவேட் ரெசிபி

2. இப்பொழுது கோதுமை மாவை சேர்க்கவும்

குல்பவேட் ரெசிபி

3. மிதமான சூட்டில் வைத்து கோதுமை மாவை 5-7 நிமிடங்கள் வறுக்கவும். லேசான பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

குல்பவேட் ரெசிபி

4. வறுத்த மாவை ஒரு தட்டிற்கு மாற்றி விட வேண்டும்

குல்பவேட் ரெசிபி

5. பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் உடைத்த வெல்லத்தை சேர்க்க வேண்டும்

குல்பவேட் ரெசிபி

6. உடனடியாக தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனால் கருகுவதை தவிர்க்கலாம்.

குல்பவேட் ரெசிபி

7. மிதமான தீயில் வெல்லம் முழுவதும் கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

குல்பவேட் ரெசிபி

8. இப்பொழுது இதனுடன் 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்

குல்பவேட் ரெசிபி

9. பிறகு வறுத்த கோதுமை மாவை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

குல்பவேட் ரெசிபி

10. நன்றாக பிசைவதற்கான பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்

குல்பவேட் ரெசிபி

11. இப்பொழுது தேங்காய் துருவலை அதனுடன் சேர்க்க வேண்டும்

குல்பவேட் ரெசிபி

12. மறுபடியும் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட வேண்டும்

குல்பவேட் ரெசிபி

13. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்

குல்பவேட் ரெசிபி
குல்பவேட் ரெசிபி

14. உங்கள் உள்ளங்கைகளால் நெய்யை தொட்டு தடவிக் கொள்ள வேண்டும்.

குல்பவேட் ரெசிபி

15. உங்கள் உள்ளங்கைகளை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்

குல்பவேட் ரெசிபி

16. இப்பொழுது சிறிய சிறிய லட்டுகளாக உருட்ட வேண்டும்.

குல்பவேட் ரெசிபி

17. ஒரு தட்டில் இந்த லட்டுகளை வைத்து பரிமாறவும்.

குல்பவேட் ரெசிபி
குல்பவேட் ரெசிபி
[ 4.5 of 5 - 123 Users]
Subscribe Newsletter