Latest Updates
-
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பச்சை பட்டாணி காளான் மசாலா
இன்று இரவு வீட்டில் சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் மற்றும் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான பச்சை பட்டாணி காளான் மசாலா செய்யுங்கள்.
இன்று இரவு வீட்டில் சாப்பிட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் மற்றும் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான பச்சை பட்டாணி காளான் மசாலா செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

உங்களுக்கு பச்சை பட்டாணி காளான் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி காளான் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 450 கிராம்
* பச்சை பட்டாணி - 3/4 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 1 /4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 /4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 /4 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 /4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1 /2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1 /2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து வேக வைக்கவும். அடுத்து வதக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பச்சை பட்டாணி காளான் மசாலா தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications