Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
காரசாரமான... ஜிஞ்சர் பெப்பர் சிக்கன்
உங்களுக்கு இஞ்சி ஃப்ளேவர் பிடிக்குமானால், நீங்கள் ஜிஞ்சர் பெப்பர் சிக்கன் செய்து சுவைக்கலாம். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, ரசம் சாதத்திற்கு ஒரு அட்டசாகமான சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.
சிக்கன் பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள். இந்த சிக்கனைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் இதுவரை நாம் சிக்கன் 65, சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் லாலிபாப் போன்றவற்றை தான் செய்து சுவைத்திருப்போம். ஆனால் உங்களுக்கு இஞ்சி ஃப்ளேவர் பிடிக்குமானால், நீங்கள் ஜிஞ்சர் பெப்பர் சிக்கன் செய்து சுவைக்கலாம். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, ரசம் சாதத்திற்கு ஒரு அட்டசாகமான சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.

கீழே ஜிஞ்சர் பெப்பர் சிக்கனை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, உப்பு தூவி நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* பிறகு மூடியைத் திறந்து, அதில் சோயா சாஸ் மற்றும் வினிகரை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, சிக்கனில் உள்ள நீர் வற்றியதும், அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கினால், காரசாரமான ஜிஞ்சர் பெப்பர் சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications
