Latest Updates
-
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ்
ஃப்ரைடு ரைஸ் ரெசிபிக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே விருப்பத்தைப் பொறுத்ததே. அதில் ஒன்று தான் கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஃப்ரைடு ரைஸ் பிடிக்குமா? அப்படியானால் இன்று இரவு உங்கள் வீட்டிலேயே ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுங்கள். ஃப்ரைடு ரைஸ் ரெசிபிக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே விருப்பத்தைப் பொறுத்ததே. அதில் ஒன்று தான் கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் - 3 டேபிள் ஸ்பூன்
* சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் போட்டு 20-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரிசியை நன்கு நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் கழுவிய அரிசியைப் போட்டு கிளறி, நன்கு வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து அரிசி வெந்துள்ளதா என்று சோதிக்க வேண்டும். இன்னும் வேகாமல் இருந்தால், மீண்டும் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். சாதம் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, உடனே நீரை வடிகட்டிவிட வேண்டும். அதன் பின் சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு உலர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அதில் வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு, அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications