விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும்

Posted By:

Ganesh Chaturthi Special Chettinad Uppu Appam Recipe in Tamil: விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே அது கொழுக்கட்டை செய்வதற்கான விழா என்று மாறிவிட்டது. ஆனால் எவ்வளவு நாட்கள்தான் கொழுக்கட்டையை மட்டுமே செய்து கொண்டிருப்பது. இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையுடன் சேர்த்து வேறுசில பலகாரங்களை செய்ய ஆசைப்படுறீங்களா?

Ganesh Chaturthi Special Chettinad Uppu Appam Recipe How to Make at Home in Tamil

அப்படியென்றால் இந்த செட்டிநாடு வெள்ளை அப்பத்தை முயற்சி செய்து பாருங்கள். இந்த வெள்ளை அப்பம் செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் வித்தியாசமானது. செட்டிநாடு பகுதிகளில் இந்த அப்பம் உப்பு அப்பம் என்று அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு இந்த வித்தியாசமான செட்டிநாடு உப்பு அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1/2 கப் பச்சரிசி
- 1/4 கப் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் தயிர்
- 1 ஸ்பூன் தேங்காய்
- கால் ஸ்பூன் மிளகுத் தூள்
- கால் ஸ்பூன் சுக்குத் தூள்
- தேவையான அளவு உப்பு
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- ஒரு சிட்டிகை சர்க்கரை

செய்முறை:

- அரிசி மற்றும் பருப்பை அளந்து எடுத்து, அவற்றைக் கழுவி, குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

- நீரை வடித்துவிட்டு, ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை மிக்சியில் சேர்க்கவும்.

- அதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும், அரைக்கும்போது கூடுதல் தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

- அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் இஞ்சிப் பொடி, மிளகுத் தூள், பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- மாவை குறைந்தது 3 மணிநேரத்திற்குப் புளிக்க வைக்கவும்.

- மாவு நன்கு புளித்ததும் அதில் தேங்காயைத் தூவி, ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.

- எண்ணெய் சூடானதும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் ஊற்றவும் அல்லது கைகளைப் பயன்படுத்தி போண்டா போல மாவை எண்ணெயில் போடவும்.

- ஒரு பக்கம் வெந்ததும், அப்பத்தைத் திருப்பிப் போட்டுச் சீராக வேகவைக்கவும்.

- அப்பம் பொன்னிறமாக மாறியதும், அதிலிருந்து அதிகப்படியான எண்ணெயை வடித்துவிட்டு வெளியே எடுக்கவும். அவ்வளவுதான் சூப்பரான செட்டிநாடு உப்பு அப்பம் ரெடி!.

- இதை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 11, 2026, 13:16 [IST]
Desktop Bottom Promotion