Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா?
முட்டை ப்ரை
உங்கள் வீட்டில் உள்ளோர் வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கிறார்களா? அவர்களை வேக வைத்த முட்டையை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் முட்டை ப்ரை செய்து கொடுங்கள்.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்த பலனைத் தரும். உங்கள் வீட்டில் உள்ளோர் வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கிறார்களா? அவர்களை வேக வைத்த முட்டையை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் முட்டை ப்ரை செய்து கொடுங்கள். இந்த முட்டை ப்ரை ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். வேண்டுமானால், இந்த முட்டை ப்ரையை மாலை வேளையில் கூட குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
9 வருடமாக அவதிப்படும் சிறுமி.. ஆபரேஷன் செய்ய உதவுங்கள்!

உங்களுக்கு சுவையான முட்டை ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ப்ரையில் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 3
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குளிர வைத்து, ஓட்டை நீக்கிவிட்டு, முட்டை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சிறிய பௌலில் மிளகாள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு டீஸ்பூன் நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முட்டையின் இருபுறங்களிலும் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, 3-4 முட்டை துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டை துண்டுகளையும் வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் எளிமையான முட்டை ப்ரை ரெடி...
குறிப்பு:
* உங்களுக்கு கரம் மசாலா பவுடர் சேர்க்க வேண்டுமானால், அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* முட்டையை மிதமான தீயில் வேக வையுங்கள். இல்லாவிட்டால், எளிதில் கருகிவிடும்.
* மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய் தூளின் அளவு மிதமான காரத்தை அளிக்கும். உங்களுக்கு காரம் அதிகமாகவோ அல்லது இன்னும் குறைவாகவோ வேண்டுமானால் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications