Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பாட்டி ஸ்டைல் முருங்கைக்காய் எண்ணெய் தொக்கு ரெசிபி... செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்...!
Murungakkai Thokku Recipe in Tamil: காய்கறிகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டவையாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அனைத்து காய்கறிகளையும் சாப்பிடுவதில்லை. ஆனால் சில காய்கறிகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தவையாக இருக்கும். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறிகள் ஒன்றுதான் முருங்கைக்காய். முருங்கைக்காயை பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு சில சமயங்களில் பொரியல் செய்து சாப்பிடுவோம்.
சிலசமயங்களில் முருங்கைக்காயை அசைவ உணவுகளில் கூட சேர்த்து குழம்பு வைப்போம். எதில் சேர்த்தாலும் முருங்கைக்காய்க்கு என்று தனிசுவை உள்ளது. நீங்கள் முருங்கைக்காயை பல வழிகளில் சமைத்து இருந்தாலும் இந்த ஸ்டைலில் செய்து சாப்பிட்டு இருக்க மாட்டிர்கள். இந்த எண்ணெய் முருங்கைக்காய் வறுவலை சைடிஷாகவும் சாப்பிடலாம், சாதத்தில் பிரட்டியும் சாப்பிடலாம். இந்த அட்டகாசமான முருங்கைக்காய் எண்ணெய் தொக்கை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- நறுக்கிய முருங்கைக்காய் - 1 கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய தக்காளி - 4
- சோம்பு - ஒரு ஸ்பூன்
- துருவிய தேங்காய் - ஒரு கப்
- மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முருங்கைக்காயை சுத்தமாக தண்ணீரில் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து கருப்பு நிற பூஞ்சை படலம் இல்லாமல் சுத்தமாக கழுவவும்.
- பின் வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைப்பதற்கு ஏற்ப துண்டுகளாக நறுக்கவும்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியையும் கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- உங்கள் விருப்பத்திற்கு தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- மற்ற தேவையான மசாலாப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.
- பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். (விழுதாக அரைக்க வேண்டாம்).
- முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு
எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய முருங்கைக்காயைப் போட்டு
வதக்கவும்.
- பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி வேகவிடவும்.
- முருங்கைக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை பிரட்டி இறக்கவும்.
- சுவையான எண்ணெய் முருங்கைக்காய் தொக்கு தயார்.
- இதை அப்படியே சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், இல்லையென்றால் சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications