Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை ஓமப்பொடி
தீபாவளி பலகாரங்களை பலரும் தங்களின் வீடுகளில் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். இந்த வருடம் நீங்கள் சற்று வித்தியாசமான மற்றும் இதுவரை நீங்கள் முயற்சி செய்திராத ஒரு பலகாரம் செய்ய நினைத்தால், கோதுமை ஓமப்பொடி செய்யுங்கள்.
தீபாவளி பலகாரங்களை பலரும் தங்களின் வீடுகளில் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். இந்த வருடம் நீங்கள் சற்று வித்தியாசமான மற்றும் இதுவரை நீங்கள் முயற்சி செய்திராத ஒரு பலகாரம் செய்ய நினைத்தால், கோதுமை ஓமப்பொடி செய்யுங்கள். இந்த கோதுமை ஓமப்பொடி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது மற்றும் தீபாவளி பலகாரமாக செய்ய ஏற்றது. அதோடு இது வீட்டில் இருக்கும் கோதுமை மாவைக் கொண்டு செய்யக்கூடியது என்பதால் நீங்கள் இன்றே கூட இதனை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு கோதுமை ஓமப்பொடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ஓமப்பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஓம விதைகளை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் நீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் உப்பு, பெருங்காயத் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் வடிகட்டிய ஓம நீரை சேர்த்து நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முறுக்கு பிழியும் உழக்கை எடுத்து, அதில் சிறு சிறு துளைகளைக் கொண்ட தட்டை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், முறுக்கு உழக்கில் உள்ள மாவை எண்ணெயில் நேராக பிழிந்து விட வேண்டும்.
* பின் அதை பொன்னிறமாகும் வரை பொரித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை கையால் நொறுக்கி விட்டால், சுவையான கோதுமை ஓமப்பொடி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications