Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை
இதுவரை தீபாவளிக்கு முறுக்கு, சீடை, அதிரசம், குலாப் ஜாமூன் போன்றவற்றைத் தான் செய்திருப்போம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமான செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. பலரும் வீடுகளில் தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். தீபாவளி என்றாலே பலருக்கும் பட்டாசுக்கு அடுத்ததாக நினைவிற்கு வருவது, வீட்டில் செய்யும் பலகாரங்களாகத் தான் இருக்கும். இதுவரை தீபாவளிக்கு முறுக்கு, சீடை, அதிரசம், குலாப் ஜாமூன் போன்றவற்றைத் தான் செய்திருப்போம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமான செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.

கீழே செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* ரவை - 1/8 கப்
* அரிசி மாவு - 1/8 கப்
* துருவிய தேங்காய் - 1/8 கப்
* ஏலக்காய் பொடி - 1/8 டீஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை
* முந்திரி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப் + 1/2 கப்
வெல்லப் பாகு தயாரிக்க...
* வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, 2 கப் நீரை ஊற்றி, பாசிப்பருப்பை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்து, பின் அரிசி மாவை போட்டு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் துருவிய தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள பாசிப் பருப்பைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
* இறுதியில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது, பாத்திரத்தில் ஒட்டாமல் இருந்தால், அதில் ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால், சுவையான செட்டிநாடு உக்கரை தயார்.



Click it and Unblock the Notifications
