Latest Updates
-
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா?
டல்கோனா காபி
கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களிடையே காபியில் ஒரு வகையான டல்கோனா காபி மிகவும் பிரபலமானது. இதனால் டல்கோனா காபியின் மீதான ஆசை அதிகரித்து, பலருக்கும் இந்த காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் உடல் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் பானம் தான் காபி. இந்த காபியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களிடையே காபியில் ஒரு வகையான டல்கோனா காபி மிகவும் பிரபலமானது. இதனால் டல்கோனா காபியின் மீதான ஆசை அதிகரித்து, பலருக்கும் இந்த காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கும் டல்கோனா காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே டல்கோனா காபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
* சுடுநீர் - 1 டீஸ்பூன்
* பால் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் காபி பவுடரைப் போட்டு கொள்ள வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையைப் போட்டு, சுடுநீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் கொண்டு ஒருமுறை கிளறி விட வேண்டும். இப்போது கலவையின் நிறம் அடர் ப்ரௌன் நிறத்தில் இருக்கும்.
* பின்பு ஒரே வேகத்தில் 10-15 நிமிடம் தொடர்ச்சியாக அடிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து அடிக்கும் போது கலவையின் நிறமானது மாறி ஒருவித க்ரீம் போன்று காணப்படும். இப்போது டல்கோனா கலவை தயார்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
* பின் ஒரு டம்ளரில் ஒரு டேபிள் பூஸ்ன் டல்கோனா கலவையைப் போட்டு, அதில் ஒரு கப் சூடான பாலை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதில் ஒரு ஸ்பூன் டல்கோனா கலவையைப் போட்டால், டல்கோனா காபி ரெடி!



Click it and Unblock the Notifications