Latest Updates
-
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும்
மொறுமொறுப்பான... சிக்கன் பாப்கார்ன்
உங்களுக்கு சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் பிடிக்குமா? அடிக்கடி இதை கடைகளில் வாங்கி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இனிமேல் அதை உங்கள் வீட்டிலேயே செய்து சுவையுங்கள்.
சிக்கன் பலரது விருப்பமான அசைவ உணவாகும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை கடைகளில் சுவைத்திருப்போம். அப்படி கடைகளில் விற்கப்படும் ரெசிபிக்களை வீட்டிலும் செய்ய முயற்சிப்போம். உங்களுக்கு சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் பிடிக்குமா? அடிக்கடி இதை கடைகளில் வாங்கி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இனிமேல் அதை உங்கள் வீட்டிலேயே செய்து சுவையுங்கள்.

உங்களுக்கு சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வதென்று தெரியாதா? கீழே சிக்கன் பாப்கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
* பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரட் - 4
* முட்டை - 1
* பால் - 1 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட வேண்டும். இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான சிக்கன் பாப்கார்ன் தயார்.



Click it and Unblock the Notifications








