நாக்கை சப்பு கொட்ட வைக்கும், காரசாரமான க்ரீன் சட்னியை 15 நிமிடத்தில் செய்வது எப்படி?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

கொத்தமல்லி சட்னி ரெசிபி அல்லது க்ரீன் சட்னி ரெசிபி மிகவும் சுவையானது. இதை சாட்ஸ், ஸ்நாக்ஸ் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும். இதன் ருசி டேங்கியாகவும்(tangy), காரமாகவும் இருக்கும். இது இந்திய ஸ்நாக்ஸ் வகைகளுக்கு கலரூட்ட பயன்படுகிறது. இந்த க்ரீன் சட்னி இல்லாமல் சாட் சாப்பிட்டால் எந்த வித திருப்தியும் ஏற்படுவதில்லை என்பது நிறைய விரும்பிகளின் கருத்து. இது சான்ட்விச் போன்றவற்றிலும் பயன்படுகிறது.

இந்த க்ரீன் சட்னி யை தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து ஒரு வாரம் வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இது சீக்கிரமாக கெட்டுப் போகாது. இதை எளிதாக நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். சரி வாங்க இப்போ இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்கத்துடன் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கொத்தமல்லி சட்னி ரெசிபி வீடியோ

காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
மல்லிச் சட்னி ரெசிபி | க்ரீன் சட்னி ரெசிபி | ‘சாட்’க்கு க்ரீன் சட்னி | வீட்டுத் தயாரிப்பு மல்லிச் சட்னி
Prep Time
10 நிமிடங்கள்
Cook Time
10 நிமிடங்கள்
Total Time
15 நிமிடங்கள்

Recipe By: ரீடா த்யாகி

Recipe Type: ரெசிபி வகை : சுவையூட்டும் ரெசிபி

Serves: பரிமாறும் அளவு :1ஜார்

Ingredients
 • கொத்தமல்லி இலைகள் - 1 பெரிய பெளல் (நறுக்கியது)

  மாங்காய் - 1 சிறியது (தோலுரித்து மற்றும் வெட்டிக் கொள்ளவும்)

  வெங்காயம் - 1 மீடியம் சைஸ் (தோலுரித்து மற்றும் வெட்டி கொள்ளவும்)

  பச்சை மிளகாய் - 8-10 சிறியது

  இஞ்சி - 2 inch (தோலுரித்தது)

  உப்பு - 2 டேபிள் ஸ்பூன்

  சுகர்-2 டேபிள் ஸ்பூன்

  லெமன் ஜூஸ் - 2-3 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • 1. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.

  2. பிறகு வழுவழுவென நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.

Instructions
 • 1. கொத்தமல்லி இலைகளை நன்றாக நீரில் கழுவி அதிலுள்ள மணல் துகள்கள் போன பிறகு பயன்படுத்தவும்.
 • 2. சட்னி அரைக்கும் போது தண்ணீர் தேவைப்பட்டால் 2-3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
 • 3. இதனுடன் புதினா இலைகளை சேர்த்து கொண்டால் புதுவிதமான மணக்கும் சுவை கிடைக்கும். இதற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பயன்படுத்தினால் இன்னும் டேஸ்டியாக இருக்கும்.
 • 4. இதை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 டேபிள் ஸ்பூன்
 • கலோரிகள் - 4 cal
 • கொழுப்பு - 0.1கிராம்
 • புரோட்டீன்ஸ் - 0.3 கிராம
 • கார்போஹைட்ரேட் - 0.7 கிராம்
 • நார்ச்சத்து - 0.4 கிராம்

செய்முறை

1.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.

காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை

2.பிறகு வழுவழுவென நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.

காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
காரசாரமான கொத்துமல்லி சட்னி செய்முறை
[ 4.5 of 5 - 83 Users]
Story first published: Thursday, July 20, 2017, 17:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter