Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி
உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரி காளான் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை காளான் வாங்கினால், அதைக் கொண்டு கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் காளான் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி அதை வாங்கி சமைப்பீர்களா? உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரி காளான் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை காளான் வாங்கினால், அதைக் கொண்டு கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த கிரேவி சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கூர்க் ஸ்டைல் காளான் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 500 கிராம் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - பற்கள்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து கிளறி, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய காளானை சேர்த்து நன்கு நீர்விடும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி அரை கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
* மிதமான தீயில் கிரேவி நன்கு 5 நிமிடம் கொதித்த பின், கிரேவியை அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான கூர்க் ஸ்டைல் காளான் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications