Latest Updates
-
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும்
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்..
Kathirikkai Chutney Recipe In Tamil: காலையில் டிபனாக செய்யும் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வீர்களா? இப்படி எப்பவும் ஒரே சட்னியை திரும்ப திரும்ப செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையுடன் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக கத்திரிக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பெரிய கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, அதையும் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் நறுக்கயி வெங்காயம், பூண்டு சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கயி தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அனைத்தையும்
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய
கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து, காய்
நன்கு மென்மையாக வேகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து, 2
நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு
மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் குளிர வைத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
கத்திரிக்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
