Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சாக்லேட் இட்லி கேக்
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுவையான மற்றும் எளிமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சூப்பரான சாக்லேட் இட்லி கேக் செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுவையான மற்றும் எளிமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? என்ன செய்து கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சூப்பரான சாக்லேட் இட்லி கேக் செய்து கொடுங்கள். இந்த இட்லி கேக் சாப்பிட அப்படியே கேக் போன்ற சுவையுடன் இருக்கும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக பெரியோர்களும் விரும்பி சாப்பிட ஏற்ற ரெசிபியும் கூட.

உங்களுக்கு சாக்லேட் இட்லி கேக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாக்லேட் இட்லி கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் அல்லது பால் - 1/4 கப்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இட்லி தட்டில் எண்ணெயைத் தடவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிர், சர்க்கரையை ஒன்றாக எடுத்து, சர்க்கரை கரைந்து நன்கு க்ரீம் போல் ஆகும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ரவையை சேர்த்து நன்கு கிளறி, பின் கொக்கோ பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் நீர்/பால் ஊற்றி கிளறி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், அதில் பேக்கிங் சோடா மற்றும் மைதாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அந்த கலவையை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான சாக்லேட் இட்லி கேக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
