Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சில்லி முட்டை கிரேவி
உங்கள் வீட்டில் சைனீஸ் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை மற்றும் சோயா, தக்காளி, சில்லி சாஸ்கள் இருந்தால், அவற்றைக் கொண்டு சுவையான சில்லி முட்டை கிரேவி செய்யலாம்.
உங்கள் வீட்டில் உள்ளோர் சைனீஸ் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சைனீஸ் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை மற்றும் சோயா, தக்காளி, சில்லி சாஸ்கள் இருந்தால், அவற்றைக் கொண்டு சுவையான சில்லி முட்டை கிரேவி செய்யலாம். இந்த சில்லி முட்டை கிரேவி ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் ப்ளைன் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு சில்லி முட்டை கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி முட்டை கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்ளுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 5
* மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* ரெட் சில்லி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* வினிகர் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* சோளா மாவு - 1 டீஸ்பூன் (சிறிது நீரில் கலந்து வைத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு முட்டை துண்டை எடுத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள கலவையில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டைகளையும் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
* அதன் பின் நீரில் கலந்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி, சாஸ் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, பொரித்த முட்டைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சில்லி முட்டை கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












