Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? அப்ப இந்த செட்டிநாடு குழம்பை செய்யுங்க.. தட்டு சோறு காலியாகும்..
Chettinad Pepper Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு இருந்தால், அதைக் கொண்டு செட்டிநாடு குழம்பு செய்யுங்கள். இந்த செட்டிநாடு மிளகு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சளி பிடித்திருக்கும் போது இந்த குழம்பை செய்து சாப்பிட்டால், தொண்டைக்கு இதமாக இருக்கும்.
இந்த குழம்பை நல்ல சூடான சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய்/நெய் ஊற்றி சாப்பிடும் போது, சுவை வேற லெவலில் இருக்கும். இந்த மாதிரியான குழம்பை குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடும் போது, சூப்பராக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை ஒருமுறை செய்தால் 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு செட்டிநாடு மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 இலை
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - எலுமிச்சை அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* தண்ணீர் - 1/4 கப் + 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள்/குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் எலுமிச்சை அளவு புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, கடலைப்
பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில்
வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து, ஈரப்பதம் போக
வறுத்து இறக்கி, அதையும் வறுத்த பொருட்களுடன் சேர்த்து குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்கள் அனைத்தையும்
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஊற வைத்த புளி மற்றும் புளி ஊற வைத்த
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்
தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின்
மிக்சர் ஜாரில் 1/4 கப் நீரை ஊற்றி அலசி, வாணலியில் ஊற்றி, அத்துடன்
மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு
கிளறி 2 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து
எண்ணெய் பிரிந்து குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான செட்டிநாடு மிளகு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
