Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மணமணக்கும்.. செட்டிநாடு கோழி குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Chettinad Kozhi Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்குவீர்களா? எப்போது சிக்கனை வாங்கினாலும், ஒரே சுவையில் தான் சமைத்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு கோழி குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த செட்டிநாடு கோழி குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, நல்ல சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். இந்த பக்குவத்தில் சிக்கன் குழம்பை ஒருமுறை வைத்தால் போதும், பின் எப்போதும் இப்படி தான் கோழி குழம்பை செய்வீர்கள்.

உங்களுக்கு செட்டிநாடு கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* பிரியாணி இலை - 2
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சிக்கன் - 1 கிலோ
* கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* சுடு தண்ணீர் - 3/4 கப்
* பூண்டு - 6-7 பல் (தட்டியது)
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நீரில் நன்கு
கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் கெட்டித் தயிரை சேர்த்து நன்கு கிளறி, 3/4 கப்
சுடுநீரை ஊற்றி கிளறி, கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து மிதமான
தீயில் வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் தோலுடன் தட்டி
வைத்துள்ள பூண்டு பற்கள், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கி சிறிது நேரம் மூடி வைத்தால்,
சுவையான செட்டிநாடு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications