Latest Updates
-
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்..
மணமணக்கும்... செட்டிநாடு முட்டை குழம்பு
விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.
கொரோனா ஊரடங்கால் சிக்கன், மட்டன் கிடைப்பது என்பது கடினம். ஆனால் உங்கள் விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2 வயது குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்.. உடனே நிதி உதவி செய்யுங்கள்!

தேவையான பொருட்கள்:
* முட்டை - 4-5
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* காஷ்மீரி வரமிளகாய் - 4-5
* மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த முட்டைகளை ஆங்காங்கு கத்தியால் கீறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள சீரகம், சோம்பு விதைகளைப் போட்டு தாளித்து, பின் துருவிய தேங்காய், வர மிளகாய் மற்றும் மிளகு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள முட்டையைப் போட்டு லேசாக ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து தக்காளியை ஊற்றி 2 நிமிடம் வேக வைத்து, பின் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* மசாலாவில் உள்ள நீர் முற்றிலும் வற்றி அடிப்பிடிக்குமாறு வறண்டு இருந்தால், அதில் கால் கப் நீரை ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* மசாலா பச்சை வாசனை போய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டைகளைப் போட்டு, 3-4 வேக வையுங்கள். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால் உங்களுக்கு வேண்டிய அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் 10-12 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிட்டால், சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார்.
Image Courtesy: whiskaffair



Click it and Unblock the Notifications