Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க
ப்ராக்கோலி 65
ப்ராக்கோலி 65 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, இதை மதிய உணவிற்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
பலர் மார்கெட் சென்றால் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் காணப்படும் ப்ராக்கோலியைப் பார்த்திருப்போம். இத்தகைய ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தத் தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆனால் இந்த ப்ராக்கோலியை வாங்கினால், எப்படி சமைப்பது என்று பலரும் தெரியாத காரணத்தினாலேயே வாங்காமல் வந்துவிடுவோம்.

அத்தகையவர்களுக்காகத் தான், அனைவரும் ப்ராக்கோலியை சாப்பிட வேண்டும் என்பதற்காக தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அற்புதமான ப்ராக்கோலி ரெசிபியைக் கொடுத்துள்ளது. அது தான் ப்ராக்கோலி 65. இந்த ப்ராக்கோலி 65 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, இதை மதிய உணவிற்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
MOST READ: சுவையான.. பூசணிக்காய் பொரியல்
இப்போது அந்த ப்ராக்கோலி 65 ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 3 கப் (சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/2 கப்
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் நறுக்கிய ப்ராக்கோலியைப் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் நீரை வடிகட்டி விட்டு, ப்ராக்கோலியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் எண்ணெய் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெயானது சூடானதும், மசாலாக்கள் போட்டு பிரட்டி வைத்துள்ள ப்ராக்கோலியைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான ப்ராக்கோலி 65 ரெடி!



Click it and Unblock the Notifications
