Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
வீட்ல கத்திரிக்காய் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் ரசம் வைச்சு பாருங்க... நீங்களே அசந்துருவீங்க...!
Brinjal Rasam Recipe in Tamil: ரசம் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். தென்னிந்திய உணவுகளில் ரசத்திற்கு என்று முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப ரசத்தின் சுவையும், அதனை தயாரிக்கும் முறையும் மாறினாலும் ரசம் என்பது எப்போதும் மாறாத உணவாக இருக்கும்.
மற்ற உணவுகளைப் போலவே ரசத்திலும் பல வகைகள் உண்டு. தக்காளி ரசம், பருப்பு ரசம், புளி ரசம், செலவு ரசம், எலுமிச்சை ரசம், கொள்ளு ரசம் என சொல்லி கொண்டே போனாலும் ரசத்தின் வகைகள் ஒருபோதும் முடிவடையாது. ஒவ்வொரு ரசத்திற்கும் ஒரு தனிப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கும். அந்த வரிசையில் இங்கு நாம் பார்க்க போவது ஆந்திரா ஸ்பெஷல் கத்திரிக்காய் ரசம்.

கத்திரிக்காயில் ரசமா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இந்த ரசம் ஆந்திராவில் மிகவும் பிரபலமானது மற்றும் சுவையானதும் கூட. இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ரசத்தை எப்படி வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய்- 1/4 கிலோ
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- புளி கரைசல்- 1/2 கப்
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- வெல்லம்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காயை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
- பிறகு, சுட்ட கத்தரிக்காயின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும், காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு கரண்டியை வைத்து கத்தரிக்காயை மசித்துக் கொள்ளுங்கள்.
- நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
- பிறகு, இதனுடன் தூளாக்கிய வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து நன்றாக கரைத்து விடுங்கள்.
- இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய வர மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்!



Click it and Unblock the Notifications