2 முட்டையும், 5 பிரட்டும் இருந்தா.. காலையில் ஒருமுறை இந்த டிபனை செஞ்சு பாருங்க... அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Bread Kothu Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த ஒரு சுவையான காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டையும், பிரட்டும் இருந்தால், அதைக் கொண்டு பிரட் கொத்து செய்து சாப்பிடுங்கள்.

இந்த பிரட் கொத்து 10 நிமிடத்தில் செய்து சாப்பிடக்கூடிய அளவில் மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது டக்கென்று காலை உணவை செய்ய நினைக்கும் போது செய்து சாப்பிட ஏற்ற ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பிரட் கொத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Bread Kothu How To Make a Bread Kothu Recipe

உங்களுக்கு பிரட் கொத்து எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் கொத்து ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* முட்டை - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரட் - 5 துண்டுகள்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது கொத்தமல்லியை தூவி வதக்க வேண்டும்.
* பின்பு 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன் பொடிமாஸ் போன்று வதக்கி செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக 5 பிரட் துண்டுகளை எடுத்து பொடியாக துண்டுகளாக்கி, அவற்றை முட்டை பொடிமாஸ் உடன் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான பிரட் கொத்து தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion