1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Kutty Bonda Recipe In Tamil: ஈவ்னிங் நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் வேளையில் நன்கு மொறுமொறுவென்றும் சூடாகவும் சாப்பிட தோன்றும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்போதும் செய்வது போன்று கடலை மாவைக் கொண்டு பஜ்ஜி, வடை செய்வதற்கு பதிலாக, வீட்டில் 1 கப் அரிசி மாவு இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குட்டி போண்டா செய்து சாப்பிடுங்கள். இந்த போண்டா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த போண்டா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

Bonda Recipes How To Make Crispy And Delicious Kutty Bonda

உங்களுக்கு இந்த குட்டி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குட்டி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய உருளைக்கிழங்கு - 1
* தண்ணீர் - சிறிது
* அரிசி மாவு - 1 கப்
* மைதா மாவு - 1 கப்
* சீரகம் - 1/2
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டு, அத்துடன் அரிசி மாவு, மைதா, சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு போண்டா மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் குட்டி குட்டி போண்டாக்களாக போட்டு, குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான குட்டி போண்டா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 14, 2026, 18:58 [IST]
Desktop Bottom Promotion