Latest Updates
-
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
சப்பாத்தி, பூரிக்கு இந்த பாம்பே பூரி மசாலாவை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Bombay Poori Masala Recipe In Tamil: விடுமுறை நாளில் தான் உங்கள் வீட்டில் காலை டிபனாக பூரி, சப்பாத்தி என்று செய்வீர்களா? அப்படி பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக பாம்பே பூரி மசாலாவை செய்யுங்கள்.
இந்த மசாலாவிற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் இருந்தாலே 10 நிமிடத்தில் சட்டென்று பூரி மசாலாவை செய்யலாம். இந்த ஸ்டைலில் மசாலா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பாம்பே பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 4
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்குகளை இரண்டு துண்டுகளாக்கி, குக்கரில் போட
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கிழங்கு
மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில்
எடுத்து வைத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை நன்கு
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கசூரி மெத்தியை கையால் நசுக்கி சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து,
குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள்
சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* கிழங்கு நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான பாம்பே பூரி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications