Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
பாம்பே சட்னி
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே அற்புதமாக இருக்கும் ஒரு சைடு டிஷ் தான் பாம்பே சட்னி என்று அழைக்கப்படும் கடலை மாவு சட்னி. கடலை மாவு சட்னியானது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

மேலும் இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அதிக காரம் இல்லாமல் இருக்கும். உங்களுக்கு பாம்பே சட்னி அல்லது கடலை மாவு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சி செய்யுங்கள். முக்கியமாக இந்த சட்னியை செய்து சுவைத்த பின் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும்.
* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் கடவை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
* பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
* கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார்!
குறிப்பு:
உங்களுக்கு சட்னி சற்று புளிப்பாக வேண்டுமானால், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
