Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
சப்பாத்தி, பூரிக்கு 10 நிமிஷத்துல செய்யுற சூப்பரான பாம்பே சட்னி... செஞ்சு பாருங்க... எல்லாரும் அசந்துருவாங்க!
Bombay Chutney Recipe in Tamil: பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான உணவாக இருக்கும் இட்லி, தோசைக்கு புதுப்புது சைடிஷ்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் எப்போதும் போல தேங்காய் மற்றும் தக்காளி சட்னி வைத்தே இவற்றை சாப்பிட்டால் சில வாரங்களிலேயே போரடித்துவிடும். இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கும் பாம்பே சட்னி சிறந்த சைடிஷாக இருக்கும்.
பாம்பே சட்னி பொதுவாக கடலை மாவு சட்னி என்றும் அழைக்கப்படுகிறது, இது முழு மசாலா, வெங்காயம்-தக்காளி மற்றும் பிற பொருட்களுடன் கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சூப்பரான சட்னியாகும். இது பல சாலையோர கடைகளில் இட்லி, தோசைக்கு பிரதானமான சட்னியாக பரிமாறப்படுகிறது. இந்த சுவையான சட்னியை செய்வது மிகவும் எளிதானது. இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் கடலை மாவு
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 நறுக்கிய தக்காளி
- அரை கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1/2 ஸ்பூன் பெருங்காயம்
- 1 அங்குல இஞ்சி
- 3 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- 2 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துகொண்டு தண்ணீர்
சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். தண்ணீர் தாராளமாகவே
சேர்க்கலாம். இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். இதில் 1 டீஸ்பூன்
கடுகு, ½ டீஸ்பூன் கடலைப் பருப்பு, ½ டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ½
டீஸ்பூன் சீரகம், 2 வர மிளகாய், சில கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு
பெருங்காயம் சேர்க்கவும். இது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- மேலும் 1 இன்ச் இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் உப்பு, ¼
தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை
வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் 1 தக்காளி, 1 கப் தண்ணீர் சேர்த்து
மூடி வைத்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
- இதில் தயார் செய்து வைத்துள்ள கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு
கலக்கவும்.
- கடலை மாவு கெட்டியாக ஆரம்பித்தவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு
கிளறவும்.
- தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சட்னியின் நிலைத்தன்மையை
சரிசெய்யவும். இந்த சட்னி இறக்கி வைத்ததும் கெட்டியாகி விடுவதால்,
சட்னியின் நிலைத்தன்மைக்காக தண்ணீர் அதிகம் ஊற்றவும்.
- சட்னி நன்கு கொதித்து கெட்டியாக மாறும்வரை காத்திருக்கவும்.
- இப்போது நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சூப்பரான பாம்பே சட்னி ரெடி, இதை பூரி, சப்பாத்தி அல்லது தோசையுடன்
சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications