Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சப்பாத்திக்கு ஏற்ற கருப்பு சுண்டல் மசாலா செய்வது எப்படி?
சப்பாத்திக்கு தினமும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சுண்டல் உள்ளதா? அப்படியானால் அந்த சுண்டலைக் கொண்டு ஒரு மசாலாவை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் தினமும் சப்பாத்தி கேட்பார்களா? அந்த சப்பாத்திக்கு தினமும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சுண்டல் உள்ளதா? அப்படியானால் அந்த சுண்டலைக் கொண்டு ஒரு மசாலாவை செய்யுங்கள். இந்த சுண்டல் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சுண்டல் மசாலா வேலைக்கு செல்வோர் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த மசாலாவை செய்யலாம்.

உங்களுக்கு கருப்பு சுண்டல் மசாலா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு சுண்டல் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு சுண்டல் - 2 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சன்னா மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கருப்பு சுண்டலை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் ஊற வைத்த சுண்டலை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு கப் வேக வைத்த சுண்டலை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலா பொடிகள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு சிறிது நீரை ஊற்றி, வேக வைத்துள்ள சுண்டலை சேர்த்து கிளற வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள சுண்டலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கருப்பு சுண்டல் மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications