Latest Updates
-
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும்
பாகற்காய் மசாலா
பொதுவாக பாகற்காயை புளிக்குழம்பு அல்லது பொரியல் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாகற்காயைக் கொண்டு அற்புதமான மசாலா செய்யலாம். இந்த மசாலா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
பாகற்காய் உடலுக்கு நன்மை பயக்கும் மிகவும் ஆரோக்கியமான காய்கறி. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் புழு, பூச்சிகள் அனைத்தும் அழிந்துவிடும். பொதுவாக பாகற்காயை புளிக்குழம்பு அல்லது பொரியல் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாகற்காயைக் கொண்டு அற்புதமான மசாலா செய்யலாம். இந்த மசாலா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

கீழே பாகற்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த பாகற்காய் மசாலா குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் கசப்பு அதிகம் தெரியாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பாகற்காய் - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - சுவைக்கேற்ப
* வெல்லம் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாகற்காயின் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாகற்காயை போட்டு, 2-3 டேபிள் பூன் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து உப்பு தூவி நன்கு தக்காளி வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மாங்காய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள பாகற்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு, சர்க்கரை தூவி கிளறி விட வேண்டும்.
* பின் மூடி வைத்து குறைவான தீயில் பாகற்காயில் மசாலா அனைத்தும் சேரும் வரை ஒரு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகற்காய் மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











