Latest Updates
-
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை
உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் சேப்பங்கிழங்கை ஆந்திராவில் செய்வது போன்று ஃப்ரை அல்லது வறுவல் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
கிழங்கு வகைகளில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி நார்ச்சத்துக்களும் அதிகம் இருக்கும் என்பதால், அவ்வப்போது கிழங்கு வகைகளை சமைத்து சாப்பிடுவது நல்லது. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. ஆனால் அந்த உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அந்த சேப்பங்கிழங்கை ஆந்திராவில் செய்வது போன்று ஃப்ரை அல்லது வறுவல் செய்து, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேப்பங்கிழங்கு - 500 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் உள்ள நீரை வெளியே ஊற்றிவிட்டு, கிழங்குகளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து பத்து நொடிகள் தாளிக்கவும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட கிழங்குகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மசாலா பொடிகள் கிழங்குடன் நன்கு ஒன்று சேரும் வரை மற்றும் மொறுமொறுப்பாகும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications